பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ரவுடி.! ஓடிவந்து துப்பாக்கியால் சுட்ட போலீசார்.!

by Column Editor

மதுரை அண்ணாநகர் பகுதியில் பெண்னை பலாத்காரம் செய்யமுயன்ற ரவுடி ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.

மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள செண்பகத்தோட்டம் மீனவ சங்க கட்டிடம் அருகே ஒரு பெண் நேற்று நள்ளிரவு நடந்து சென்றபோது அந்த பெண்னை சிலர் காரில் கடத்தி செல்வதாக காவல்துறை கட்டுபாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து உடனடியாக போலீசார், செண்பக தோப்பிற்கு சென்றபோது ஏற்கனவே கொலை மற்றும் கொள்ளை வழக்கில் இருக்கின்ற ரவுடி குருவி விஜய் மற்றும் கார்த்திக் ஆகியோர் ஒரு பெண்னை கற்பழிக்க முயன்றுள்ளனர். இதனைப்பார்த்து ஓடிவந்த போலீசாரை ரவுடிகள் கட்டை மட்டும் கற்களை வைத்து தாக்கியகாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தங்களை பாதுகாத்துக்கொள்ள போலீசார் வைத்திருந்த கைத்துப்பாக்கி எடுத்து குருவி விஜயை காலில் சுட்டுள்ளார். போலீசார் சுட்டதில் கீழே விழுந்த அவரை சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Related Posts

Leave a Comment