பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன்… பூஜையுடன் படப்பிடிப்பு இன்று துவக்கம்!

by Column Editor

நடிகர் பாலகிருஷ்ணா – கோபிசந்த் கூட்டணியில் உருவாகும் புதிய படம் பூஜையுடன் துவங்கியுள்ளது.

தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். மித்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். எஸ். தமன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஸ்ருதி ஹாசன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்

இப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. கன்னட நடிகரான கோபிசந்த் தற்போது சூப்பர் ஹிட் இயக்குனராகவும் மாறியுள்ளார். அவர் இயக்கத்தில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் பாலகிருஷ்ணா உடன் கூட்டணி அமைத்துள்ளதால் அந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இன்று இந்தப் படத்தின் பணிகள் பூஜையுடன் துவங்கியுள்ளது. பூஜையில் ஸ்ருதிஹாசன், பாலகிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிரது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment