423
			
				            
							                    
							        
    தளபதி விஜய்
விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியிருந்தார்.
முதல் இரண்டு நாட்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் குடும்ப ரசிகர்களின் ஆதரவோடு வசூலில் பட்டையை கிளப்பியது.
வாரிசு படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் தான் நடிப்பார் என கூறப்படுகிறது.
மீண்டும் தெலுங்கு இயக்குனர்
இந்நிலையில், நடிகர் விஜய் மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலம சந்தீப் ரெட்டி இயக்கத்தில் விஜய் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.
