பெற்ற மகளை காதலனுக்கு விருந்து வைக்க முயன்ற தாய்

by Column Editor

பெற்ற மகளை கள்ளக்காதலனுக்கு விருந்து வைக்க முயன்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கொரட்டூர் பகுதியில் வசித்து வந்தவர் பிரியங்கா(வயது37). இவரது கணவர் நரேஷ்சுமார். இந்த தம்பதிக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக கருத்து வேறுபாட்டினால் நரேஷ் குமார் பிரியங்காவை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் பிரியங்கா தனது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.
நரேஷ்குமார் பிரிந்து சென்ற ஒரு வருடத்திற்கு பின்னர் அம்பத்தூர் திருவேங்கட நகரைச் சேர்ந்த சந்தீப் என்பவர் பிரியங்காவுக்கு அறிமுகமாகி இருக்கிறார். அவருடன் ஏற்பட்ட பழக்கம் கள்ள உறவாக மாறி இருக்கிறது. பின்னர் பிரியங்காவின் வீட்டிலேயே அவரும் வசித்து வந்திருக்கிறார். கணவன் மனைவியாகவே கடந்த மூன்று வருடமாக பிரியங்காவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார் .
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பிரியங்காவின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதை பார்த்த பிரியங்கா அதை தட்டிக் கேட்காமல் அதற்கு உடந்தையாக இருந்துள்ளார். இதனால் அந்த சிறுமி தனக்கு தெரிந்தவரிடம் சொல்லி கண்ணீர் வடிக்க, அவர் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்க, அவர் அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் அம்பத்தூர் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி தலைமையில் சிறுமியிடம் சென்று போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, சந்தீப் பாலியல் தொல்லை கொடுத்ததும், தாய் பிரியங்கா அதற்கு உடந்தையாக இருந்ததும் தெரிய வந்திருக்கிறது.

இதையடுத்து பிரியங்கா – சந்தீப் இருவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Posts

Leave a Comment