மேற்கு லண்டனில் கத்திக்குத்து: இளைஞர் ஒருவர் உயிரிழப்பு- பெண்னொருவர் ஆபத்தான நிலையில் அனுமதி!

by Column Editor

மேற்கு லண்டனில் உள்ள ப்ரென்ட்ஃபோர்டில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், வயோதிபப் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

இச்சம்பவத்திற்கு தீவிரவாதத்துடன் தொடர்பு இருப்பதாக கூறுவதற்கு எதுவும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், இதுதொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை.

சுமார் 20 வயதுடைய நபர், இரவு 8 மணியளவில் அல்பானி பரேடில் சம்பவ இடத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஸ்கொட்லாந்து யார்ட் அதிகாரிகள், அவரது அடையாளத்தை கண்டுபிடிக்க முயற்சிப்பதாகவும், அவரது குடும்பத்திற்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறினார். சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்படும்.

80 வயதுடைய அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், ‘துரதிர்ஷ்டவசமாக, ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொரு நபருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு முன்னுரிமை கொடுத்து அழைத்துச் சென்றோம்’ எனக் கூறினார்.

Related Posts

Leave a Comment