குப்பை என வீசிய பொருளில் கிடைத்த பொக்கிஷம் – ஒரு நிமிடத்தில் 20 கோடிக்கு சொந்தமான பெண்

by Column Editor

இங்கிலாந்தை சேர்ந்த பெண்ணுக்கு பழைய பொருட்கள் என தூக்கி போட்ட பொருள் மூலம் கோடீஸ்வரரான சம்பவம் நடைபெற்றுள்ளது.

குறித்த பெண் வீட்டில் இருந்த பழைய பொருட்களை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் அதனை ஏலம் விடும் இடத்திற்கு எடுத்தும் சென்றுள்ளார். அந்த பெண் கொடுத்த பழைய பெட்டியில் கற்கள் இருந்துள்ளது.

அந்த கற்களை ஆய்வு செய்யும் போது தான் அது 34.19 காரட் எடை கொண்ட வைரகற்கள் என தெரியவந்துள்ளது.

அதோடு இந்த கற்களை ஆய்வு செய்த பின் அது பல ஆண்டுகளுக்கு முன் பெல்ஜியம் நாட்டில் ஆன்ட்வெர்ப்பில் எச்ஆர்டி டைமன்ட் விற்பனை பரிசோதனை கூடத்தில் இருந்து வாங்கப்பட்டது தெரியவந்தது.

இதனை அறிந்த அந்த ஏலம் விடும் நபர் வைர கற்களை கொடுத்த பெண்ணிடம் தகவல் தெரிவித்துள்ளார். தான் வைத்திருந்த கற்களை பற்றி அறிந்த அந்த பெண் ஒரு நிமிடத்தில் 20 கோடி மதிப்பிலான ரூபாய்க்கு அதிபதி ஆகியுள்ளார்.

Related Posts

Leave a Comment