1.6K
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இருந்த கேப்டன் வருண் சிங்கிற்கு தொடர்ந்து பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், கேப்டன் வருண் சிங் உயிருக்கு போராடிய நிலையில் அவரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
45 சதவீத தீக்காயங்களுடன் வருண் சிங்குக்கு, 3 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இந்நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
மேலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வருண் சிங்கின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது உடல்நிலை பற்றிய தகவல்களை கேட்டறிந்துள்ளார்.