கீர்த்தி சுரேஷை பற்றி தவறாக வீடியோ வெளியிட்ட நபர்.. போலீசில் புகார் அளித்த தந்தை

by Lifestyle Editor

நடிகை கீர்த்தி சுரேஷை பற்றி மர்ம நபர் ஒருவர் தகாத முறையில் பேசி வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில் அது பற்றி அவரது அப்பா போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார். தேசிய விருது வாங்கும் அளவுக்கு திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகையாகவும் மாறிவிட்டார். தற்போது அவர் மலையாளத்தில் மோகன்லாலுடன் மராக்கர் அரபிக்கடலின்டே சிம்மம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

அந்த படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை, அதை சமூக வலைத்தளங்களில் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த படத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் பற்றி மிகவும் தகாத வார்த்தைகளில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் மர்ம நபர்.

அது மலையாள நடிகர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் மோகன்லால் கவனத்திற்கு வந்திருக்கிறது. அவர் கீர்த்தி சுரேஷ் அப்பா தயாரிப்பாளர் சுரேஷ் குமாருக்கு இதுபற்றி தெரிவித்திருக்கிறார். அவர் உடனே திருவனந்தபுரம் டிஜிபி அலுவலகம் சென்று புகார் தெரிவித்திருக்கிறார்.

கீர்த்தி சுரேஷின் அப்பா தெரிவித்திருக்கும் இந்த புகார் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment