பிக் பாஸ் மாமியார் வீடு.. லைவ் வீடியோவில் தகாத வார்த்தையில் பேசிய அபிஷேக் ராஜா

by Column Editor

அபிஷேக் ராஜா பிக் பாஸ் 5ல் போட்டியாளராக கலந்துகொண்ட போது ஆரம்பத்தில் அதிகம் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் வீட்டில் மற்ற போட்டியாளர்களை influence செய்து விளையாட விடாமல் செய்து வந்ததால் மக்களை அவரை எலிமினேட் செய்து விட்டனர்.

அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக வீட்டுக்குள் சென்ற நிலையில் மறுபடியும் அவரை வெளியேற்றினார்கள். கடந்த வாரம் வெளியில் வந்த அபிஷேக் ராஜா இன்று இன்ஸ்டாகிராம் லைவ்வில் பேசினார்.

நண்பர்கள் உடன் வெளியில் செல்லும் போது தான் அவர் லைவ்வில் பேசினார். “மாமியார் வீட்டுக்கு சாரி பிக் பாஸ் வீட்டுக்கு இரண்டாவது முறையாக சென்று வந்த பிறகு இப்போது தான் பேசுகிறேன்” என தான் பேச ஆரம்பிக்கிறார் அபிஷேக் ராஜா.

மேலும் நண்பர்கள் உடன் அரட்டை அடித்துக்கொண்டே செல்லும் அவர் ஒருகட்டத்தில் தகாத வார்த்தையில் நண்பரை திட்டுகிறார். பிக் பாஸ் வீட்டில் இருந்ததை விட வெளியில் அபிஷேக் ராஜா மிகவும் மோசமாக பேசுவார் போல என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment