என்ன விஜய் டிவி இப்படி இறங்கிட்டீங்க.. பிக் பாஸில் இப்படி ஒரு மோசடி நடந்ததா?

by Column Editor

பிக் பாஸ் 5ல் வார இறுதி நாட்களில் கமல்ஹாசன் வரும் எபிசோடுகளை பார்ப்பதற்கு என்று அதிகம் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதனால் சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகள் மீது எப்போதும் அதிகம் எதிர்பார்ப்பு இருப்பது வழக்கம்.

கடந்த வார இறுதி எபிசோடின் ஷூட்டிங்கிற்காக கமல் நேராக ஹாஸ்பிடலில் இருந்து செட்டுக்கு சென்றுவிட்டார் என ஏற்கனவே ஒரு சர்ச்சை இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு சர்ச்சை வந்திருக்கிறது.

வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் உடன் பொது மக்கள் கேள்வி கேட்பது போல ஷோவில் ஒரு பகுதி இருந்தது. ராஜு – இமான் அண்ணாச்சியை ஒரு நபர் கேள்வி கேட்டது பெரிய சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. போட்டியாளர்களை கேள்வி கேட்ட எல்லோருமே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தான் தற்போது சர்ச்சைக்கு காரணம்.

அவர்கள் ஒன்றாக இருக்கும் போட்டோவும் தற்போது வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள்.. என்ன விஜய் டிவி இப்படி இறங்கிடீங்க.. ஒரே குடும்பம் தான் கிடைத்ததா என விமர்சித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment