330
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகண்ட சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே.
இதில் கதாநாயகியாக பவித்ரா என்பவர் நடித்து வர, கதாநாயகனாக இருதயம் நடித்து வந்தார்.
மெகா தொடராக ஓடிய இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு தான் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் ஈரமான ரோஜாவே சீரியலில் சீசன் 2 விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இதில் பவித்ராவுக்கு பதில் கதாநாயகியாக நடிக்க பிக் பாஸ் கேப்ரியலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாராம்.
இந்நிலையில் ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் சின்னத்திரையில் கதாநாயகியாக கேப்ரியலா அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.