பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா !

by Lifestyle Editor

பிரபாஸ் இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாக மாறியுள்ளார், பாகுபலி படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் மிக பெரியளவிலான வரவேற்பை நாடு முழுவதும் பெற்று வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள ராதே ஷ்யாம் இந்தியளவில் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

இதனிடையே இப்படத்தை தொடர்ந்து பிரபாஸ் சலார், ஆதிபுருஷ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படங்களை தொடர்ந்து பிரபாஸ் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

நடிகை தீபிகா படுகோன் அவருக்கு ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் பட்ஜெட் ரூ.400 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment