கஞ்சா அடிப்பதை கண்டித்த தங்கை – துடிக்க துடிக்க கொடூரமாக கொலை செய்த அண்ணன்

by Lifestyle Editor

கஞ்சா போதையில் சொந்த அண்ணனே தங்கையை வெட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகன் சரண் கஞ்சாவிற்கு அடிமையானவர். இதனால், வீட்டில் அடிக்கடி யாரிடமாவது தகராறு செய்வது வழக்கம்.

இந்நிலையில், கஞ்சா போதையில் வீட்டுக்கு வந்து சத்தம் போட்டிருக்கிறார் சரண். அப்போது, தங்கை சுவாதி சரணை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன், கஞ்சா போதையில் தங்கை என்றும் பார்க்காமல் அவரை சராமரியாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த தங்கை கீழே விழுந்து உயிருக்கு துடிதுடித்தார். இதைப் பார்த்ததும் சரண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

வெளியே சென்று வீட்டிற்கு பெற்றோர் வீடு திரும்பினர். அப்போது, வீட்டில் மகள் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கேணிக்கரை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்துவிட்டு தலைமறைவாகி இருக்கும் சரணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment