மாநாடு இத்தனை கோடி நஷ்டமா!

by Lifestyle Editor

தமிழ் சினிமாவில் கம்பேக் படம் என்று சிம்புவிற்கு, வெங்கட் பிரபுவுக்கும் இருந்தது மாநாடு. டைம் லூப் கதையை இப்படியொரு வித்தியாசமாக எங்கும் குறைவைக்காத படி எடுத்து வைத்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.

எஸ் ஜே சூர்யாவின் அட்டகாசமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தினை பிடித்துள்ளார். படம் வெளியாக பல பிரச்சனைகளை சந்தித்த சிம்பு மற்றும் தயாரிப்பாளர் பல பஞ்சாயத்துகளை சந்தித்து கஷ்டப்பட்டனர். இதுகுறித்தும் படத்தின் வெற்றி நஷ்டம் பற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பகிர்ந்துள்ளர்.

படம் ஹிட்டு தான் ஆனால் வியாபாரம் அளவில் நஷ்டம் தான் என்றுபகீர் உண்மையை உடைத்துள்ளார். சிம்பு, வெங்கட் பிரபுவிற்கு மார்க்கெட் இல்லாமல் இருந்ததால் அந்த அளவிற்கு எதிலும் வியாபாரம் இல்லை.குறைவாகவே படத்தினை விற்றோம்.தற்போது மாநாடு நேற்று வரை தமிழகத்தில் ரூ 47 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் இந்த படம் ரூ 65 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை எப்படியாவது வெளியிட வேண்டும் என்று நான் தான் பல கஷ்டங்களை சந்தித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment