ஒற்றை பாம்பால் ஏழரை கோடி ரூபாய் வீட்டை சாம்பலாக்கிய நபர்..

by Editor News

பாம்பு என்றால் பலருக்கு பயம் இருக்க தான் செய்யும். ஆனால் சிலரோ பாம்புடன் விளையாடுவதும், உணவு வைப்பதும் இன்றைய காலக்கட்டத்தில் நிகழ்ந்துவருகிறது.

பல விலங்கினங்கள் உணவு தண்ணீர் இன்றி மக்களிடம் சென்று சாப்பிடும் அவலநிலை ஏற்பட்டு இருக்கிறது. பொதுவாக எந்த விலங்கினமே மனிதனை தாக்கி முற்படுவதில்லை மனிதன் தான் விலங்கினத்தை துன்புறுத்தி காடுகளை அழித்து வீடுகளாக மாற்றி கொண்டு இருக்கிறான்.

சரி, இப்போ பாம்பால் ஒருவருக்கு ஏற்பட்ட சம்பவத்திற்கு வருவோம். அமெரிக்காவின் மேரிலாந்தில் வசிக்கும் நபர் ஒருவரின் வீட்டுக்கு அடிக்கடி பாம்பு ஒன்றின் நடமாட்டம் இருந்து வந்துள்ளது.

இதனால், அந்த நபர் பாம்பை கொல்ல முயன்ற சம்பவம் தால் ஏழரை கோடி ரூபாய் இழந்த சம்பவம் தான் பெரிய விஸ்வரூபமாக மாறி இருக்கிறது. இரவு 10 மணியளவில் பாம்பை கண்ட அந்த நபர், அருகில் இருந்த குமிட்டி அடுப்பை தூக்கி வீசி இருக்கிறார்.

ஆனால் பாம்பு தப்பி சென்றுள்ளது. அவர் வீசிய தீயால் வீடு முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. உடனடியாக வந்து தீயணைப்பு பணிகளை மேற்கொண்டாலும், வீடு எரிந்து சாம்பலானது.

எரிந்த வீட்டின் விலை மதிப்பு மட்டுமே ஏழரை கோடி ரூபாயாம். தீப்பிடித்த வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment