‘நான் வெளிய போறேன்’ முடிவை அறிவித்த பிரியங்கா

by Column Editor

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், நிரூப்பிற்கும், பிரியங்காவிற்கும் பயங்கரமான வாக்குவாதம் ஏற்படுகிறது.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து ராப் பாடகி ஐக்கி பெர்ரி சமீபத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். கொரோனா தொற்றால் கமல் பாதிக்கப்பட்டிருப்பதால், கடந்த வார நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ‘சும்மா இஷ்டத்துக்கு உக்காந்து கலாய்ச்சிட்டு இருந்தீங்களே, நா வேணாம்ன்னு சொல்லியும், கலாய்ச்சீங்களே எதுக்கு’ என பிரியங்காவிடம் கத்துகிறார் நிரூப். அப்போது ‘உன்ன நான் கலாய்ச்சதுல எதும் பிரச்னைன்னா என் கிட்ட வந்து பேசு, அவ கிட்ட ஏன் கத்திட்டு இருக்க’ என்கிறார் அபிஷேக். இதையடுத்து நிரூப்பிற்கும், பிரியங்காவிற்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

அப்போது ‘ப்ளீஸ் பிக் பாஸ் இதை நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால், சிபியோட பெட்டில் உட்கார்ந்து நாங்க ஒவ்வொருத்தரும் இதை இதை பண்ணலாம்ன்னு நாங்க டிஸ்கஸ் பண்ணினத தயவு செஞ்சு ப்ளே பண்ணுங்க. ஐ வில் கோ அவுட்’ என்கிறார் பிரியங்கா.

Related Posts

Leave a Comment