844
தொலைக்காட்சி சேனலில் டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தினை பெற்று வருவது பிக்பாஸ் 5. 50 நாட்களை தாண்டி சென்ற நிலையில் அமீர் மற்ரும் சஞ்சீவ் இருவரும் வைல்ட் கார்ட் ரவுண்டில் உள்ளே வந்துள்ளனர்.
கடந்த வாரம் அமெரிக்கா சென்று வந்த கமலுக்கு கொரோனா அறிகுறி இருப்பது உறுதியானதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைதொடர்ந்து வரும் வாரங்களுக்கு யார் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்த் வழங்குவது என்ற கேள்வி கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.
சூர்யா, ஸ்ருதிஹாசன்,விஜய் சேதுபதி, சிம்பு என லிஸ்ட் போக தற்போது 51 வயதான் நடிகை ரம்யா கிருஷ்ணனை வைத்து நிகழ்ச்சியை நகர்த்தலாம் என்று கூறப்படுகிறது. தற்போது ரம்யா கிருஷ்ணன் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனையும் செய்துள்ளார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.