‘ஜெய் பீம்’ படக்குழுவினரைப் பாராட்டிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு!

by Column Editor

ஜெய் பீம் படக்குழுவினரை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.

த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது. பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சான் ரோல்டன் இசையமைத்திருந்தார். சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்தனர்.

ஜெய் பீம் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள அதே நிலையில் ஒரு தரப்பினரின் எதிர்ப்பிற்கும் ஆளாகியுள்ளது. படத்தில் பாதிக்கப்பட்ட ராசாக்கண்ணுவின் மனைவி செங்கேணிக்கு நீதி கிடைப்பதில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் பங்கு அதிகமாக இருந்ததாக படத்தில் காண்பிக்கப்பட்டிருந்தது. நிஜத்திலும் பார்வதி அம்மாளுக்கு நீதி கிடைக்க கம்யூனிஸ்ட் கட்சியினரின் பங்கு அதிகம் இருந்துள்ளது.

அதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜெய் பீம் படத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஜெய் பீம் படக்குழுவினரை சந்தித்து பாராட்டியுள்ளார். அதில் சூர்யா, சிவகுமார், இயக்குனர் ஞானவேல் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்கள் உடன் இருந்தனர்.

Related Posts

Leave a Comment