அபிஷேக் செய்த வேலையால் பிரியாங்காவிடம் எகிறிய நிரூப் – குறும்படம் போடச்சொல்லி கதறும் பிரியங்கா!

by Column Editor

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது 60 நாட்களை கடந்துவிட்ட நிலையில், வாரம் வாரம் ஒரு போட்டியாளர்களும் வெளியேற, வைல்ட் கார்ட் என்ட்ரியாக மூன்று போட்டியாளர்களும் நுழைந்து இருக்கின்றனர்.

ஆனால், அவர்களும் இதுவரை பெரிய அளவில் எந்த சுவாரசியத்தையும் கொடுக்கவில்லை. அபிஷேக் மட்டும் content-கொடுக்க ஏதாவது ஒரு பிரச்சினை கொளுத்திபோட்டுக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், இன்றைக்கான முதல் ப்ரோமோ காட்சியில், நிரூப் பிரியாங்காவிடம் என்னை கலாய்த்ததை பற்றி கேட்டு வாக்குவாதம் செய்ய, அதற்கு அபிஷேக் உன்னை கலாய்ச்சது நான் என்கிட்ட வந்து பேசு அவளை ஏன் கலாய்க்கிற என ஹூரோயிசத்தை காட்டுகிறார்.

அதற்கு பிரியங்கா நான் என்ன பேசுனேன்னு ப்ளீஸ் குறும்படம் போடுங்க பிக்பாஸ் என கையெடுத்து கும்பிடுகிறார். இதனால், இன்றைய நிகழ்ச்சி சுவாரசியமாக செல்லும் என்பது ஒரு குறும்படம் அரங்கேறும் என்பதும் தெரிகிறது.

Related Posts

Leave a Comment