அகம்பாவம் பிடித்தவர் பிரியங்கா”; தாமரை பளீர் பேச்சல் அதிர்ந்த பிக் பாஸ் வீடு!!

by Column Editor

நேற்று கொடுக்கப்பட்ட டாஸ்கில் பிரியங்காவை வைத்து செய்துவிட்டார் தாமரை. இதனால் நேற்றைய எபிசோடே பரபரப்பானது.

பிரபல தொகுப்பாளர் பிரியங்கா நல்ல ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தவர். வெளியில் இருக்கும் வரை ரசிகர்கள் மத்தியில் அவர் கொண்டிருந்த இமேஜ், பிக் பாஸ் போட்டியாளராக வீட்டிற்குள் போன பிறகு டோட்டல் காலியாகி விட்டது.

எப்போதும் யாருடானது வாக்குவாதம், சத்தமாக கத்துவது என தனது நாட்களை கடைத்திவ் வருகிறார். பிரியங்கா. இருந்தும் இவரும் பிக் பாஸ் சுவாரஸ்யத்திற்கு ஒரு காரணம் என்றே சொல்லலாம்.

நேற்று முன் தினம் அண்ணாச்சி – நிருப் இடையேயான சண்டை பரபரப்பை ஏற்படுத்தியிருந்த சூழலில், தாமரை வீட்டிலிருந்தாலும் பிரச்னை, நாட்டிலிருந்தாலும் பிரச்சனை என பிரியங்கா கூறியதாக சொல்லி தாமரை அவரை நாமினேட் செய்தது வெளியில சிறுது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய கடந்த வார இறுதி எபிசோட்டில் உண்மை புதைக்கப்பட்டதாகவும், முழு உண்மையை பிக் பாஸ் சோ ஒளிபரப்புவதில்லை எனவும் புகார் எழுந்தது.

இந்நிலையில் நேற்று “பிரேக்கிங் நியூஸ்” என்னும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதன்படி ப்ளூ டிவி, ரெட் டிவி என போட்டியாளர்கள் இரு குழுவாக பிரிக்கப்படுவதாக பிக் பாஸிடமிருந்து உத்தரவு வருகிறது.

அப்போது மீண்டும் பிரியங்கா- தாமரை இடையே பிரச்சனை பற்றிக்கொள்கிறது. டாஸ்கின் போது பேசும் பிரியங்கா: “எனக்கு இப்போ தான் புரிஞ்சது யார் யாரை இந்த வீட்ல நம்பணும், யார் யாரை நம்பக் கூடாதுன்னு” என்று கூறுகிறார்.

பின்னர் பிரியங்காவையும், தாமரையையும் உட்கார வைத்து, ’இவங்க என்ன மாதிரியான ஃப்ரெண்ட் உங்களுக்கு’ என்று கேள்வி எழுப்ப, ‘எனக்கு ஃப்ரெண்டே கிடையாது. நம்ம பேச்சு மட்டும் தான் உயர்ந்திருக்கணும், மத்தவங்க எல்லாம் நமக்கு கீழ தான்னு நினைக்கிறது பிரியங்கா தான். என போட்டுடைக்கிறார் தாமரை இதனால் பிக் பாஸ் வீட்டில் வரும் நாட்கள் மிகுந்த சுவாரஸ்யம் மிக்கதாக இருக்கும் என ரசிகர்கள் எதிர் நோக்கி உள்ளனர்.

Related Posts

Leave a Comment