பிக்பாஸ் வீட்டின் ’சகுனி’ சுரேஷ் சக்ரவர்த்தி… விஷ பாட்டில் அனிதா சம்பத்.. அசிங்கப்படுத்திக் கொள்ளும் ஹவுஸ்மேட்டுகள்! ப்ரோமோ இதோ!

by Column Editor

பிக்பாஸ் வீட்டின் சகுனியாக சுரேஷ் சக்ரவர்த்தியும், விஷப்பாட்டிலாக அனிதா சம்பத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் அல்டிமேட் இன்று 6வது நாளை தொட்டுள்ளது. விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இன்று ‘நீ யாரு எனக்கு தெரியும் பாகம் 2’ என்ற புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.

அதன்படி பிக்பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்டுகள் ஒவ்வொருக்கும் ஒரு பட்டம் கொடுக்கின்றனர். அந்த வகையில் சர்ச்சை இவருக்கு சட்டை மாதிரி என்ற பட்டத்திற்கு வனிதாவிற்கு 7 ஓட்டுக்களை ஹவுஸ்மேட்டுகள் போடுகின்றனர். பட்டத்தை வாங்கிய பிறகு பேசும் வனிதா, மிகவும் கூலாக, அவ்வளவுதானா, இதுதானா மேட்டரு. இது நல்லா இருக்கே. ஐ லவ்யூ காண்ட்டவர்ஸி என்று சொல்லி சந்தோஷப்படுகிறார்.

இந்த வீட்டின் சகுனி யார் என்ற பட்டத்திற்கு சுரேஷ் சக்ரவர்த்தியை ஹவுஸ்மேட்டுகள் தேர்ந்தெடுக்கின்றனர். அப்போது பேசும் அவர், இருக்கிறதுலேயே சிறந்த விருது என்றால், அது இதுதான் என்று பெருமையுடன் சொல்கிறார். இதைத்தொடர்ந்து விஷ பாட்டில் பட்டம் அனிதா சம்பத்திற்கு கொடுக்கப்படுகிறது. என்னை பார்த்து நாலு பேரு பயப்படுகிறார்கள் என்றால் எனக்கு சந்தோஷமாக இருக்கு என்று கூறுகிறார். இப்படி ஹவுஸ்மேட்டுகள் தங்களை தாங்களோ அசிங்கப்படுத்திக் கொள்ளும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment