பூர்ணிமாவின் மோசமான செயலால் கடுப்பான நெட்டிசன்கள்.! கண்டிப்பாரா கமல்!!

by Lifestyle Editor

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டுள்ளது. இந்த சீசனிலும் கடந்த சீசன்களை போலவே சண்டை, சச்சரவுக்கு பஞ்சமில்லை. ஆனால் இந்த சீசனில் சில போட்டியாளர்களின் செயல்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் சரவண விக்ரம் வெளியேற்றப்பட்டார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் Ticket To Finale டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கடுமையான டாஸ்க்குகளை கொடுத்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் முயல் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அதில், மணி, விஷ்ணு வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் தன்னிடம் இருந்த முயலை மணியிடம் கொடுக்கச் செல்லும்போது பூர்ணிமா காரி துப்பி விட்டு கொடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் பெரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அதனை கமல் கண்டிப்பாரா எனவும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment