ராஜூவை குறைச்சொல்லும் பாவனி – அவர் விஷம்போல் செயல்படுகிறார்

by Column Editor

ராஜூ மற்றும் பாவனி ஆகிய இருவரும் ஒருவரையொருவர் குறைச்சொல்லும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பொம்மை டாஸ்க்கால் பிக்பாஸ் வீடு சண்டை காடாய் இருந்த நிலையில் 13 போட்டியாளர்களுக்கும் பிக்பாஸ் விருது வழங்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று போட்டியாளர் ஒவ்வொருக்கும் விருது வழங்கப்பட்டது. முதலில் சிறந்து விளையாடிய போட்டியாளராக நிரூப்பும், அக்ஷராவுக்கு அடுத்த விருதும் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நீ புடுங்கிறது எல்லாமே தேவையில்லாத ஆணிதான் என்ற விருது ராஜூவுக்கு கொடுக்கப்படுகிறது. விருதுக்கு பிறகு பேசும் ராஜூ, இனி தேவையுள்ள ஆணிகள் புடுங்கப்படும் என்றார். விருது மேடையில் பிரியங்காவிடம் பேசும் ராஜூ, பேர் மட்டும்தான் பாவனி என்று வைத்துக்கொண்டார். மற்றப்படி நான் தான் பாவம். அவங்கள பார்க்கும் போதெல்லாம் நம்ம தான் பாவம் என்று நினைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.

இதனால் கடுப்பாகும் பாவனி, அபினய் மற்றும் மதுமிதாவிடம், ராஜூ குறித்து குறைச்சொல்லுகிறார். முதலில் அக்ஷரா பற்றி பேசும் பாவனி, ராஜூ விஷம் போல் செயல்பட்டு வருகிறார். ஏன் இப்படி செய்கிறார் என்பது எனக்கு உண்மையாகவே புரியவில்லை. யாரு ரொம்ப பாதுகாப்பா விளையாடறாங்க என்று சனிக்கிழமை பேசும்போது என்னை கேட்டால் சொல்வேன். அது ராஜூதான் என்கிறார் பாவனி. இப்படி பாவனி மற்றும் ராஜூ ஆகிய ஒருவரையொருவர் குறைச்சொல்லும் ப்ரோமோ வெளியாகி இன்றைய எபிசோடின் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது.

Related Posts

Leave a Comment