நடிகர் துல்கர் சல்மான் தமிழ் ரசிகர்களுக்கு ஓ காதல் கண்மணி என்ற படம் மூலம் நன்கு அறிமுகமானவர். மலையாளத்தில் ஏகப்பட்ட படங்கள் தொடர்ந்து நடித்து வருகிறார், அப்படங்கள் செம ஹிட் நடிக்கின்றன.
அண்மையில் துல்கர் சல்மான் தமிழில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் விஜய் குறித்து பேசும்போது, நான் விஜய்யின் மாஸ்டர் படத்தை பார்த்தேன், எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது.
வாத்தி கம்மிங் பாடலில் பெரிய ஷாட் ஒன்று வருகிறது, அதைப்பார்த்து அவர் எப்படி தான் இப்படியெல்லாம் மிகவும் சாதாரணமாக ஆடுகிறார் என வியந்து பார்த்தேன்.
எனக்கு நடனம் எல்லாம் கஷ்டம் கொஞ்சம், படப்பிடிப்பு செய்யும் போது எத்தனை முறை எடுத்திருப்பார்கள், அவரின் அவ்வளவு ஈஸியாக நடனம் ஆடி செல்கிறார்.
அதைப்பார்த்து விஜய் ஒரு சூப்பர் ஹீரோ என வியந்திருக்கிறேன் என பேசியுள்ளார்.