டெல்லி – அமெரிக்கா: விமானத்தில் பயணம் செய்யும் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி – பயணிகள் அச்சம்

by Column Editor

டெல்லியில் இருந்து அமெரிக்காவுக்கு விமானம் ஏறிச்சென்றப் பிறகு இரு குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக பரிசோதனை முடிவு வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர். பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மீண்டும் அமெரிக்கா செல்வதற்காக, அக்குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சனிக்கிழமை அன்று ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகளை கொடுத்து வந்துள்ளனர்.

ஆனால் பரிசோதனை முடிவு கிடைப்பதற்கு தாமதமானதாக கூறப்படுகிறது. இதனால் அந்த குடும்பத்தினர் தங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்று வேறொரு பரிசோதனைக் கூடத்தில் சான்றிதழைப் பெற்று, ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை 2 மணியளவில் டெல்லி விமான நிலையத்திலிருந்து விமானத்தில் ஏறிச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அன்று ஜெய்ப்பூரில் அந்த குடும்பத்தினர் ஏற்கனவே எடுத்திருந்த பரிசோதனை முடிவுகள் வெளியாகியிருந்தன.

அதில் 6 மற்றும் 8 வயதுடைய இரு குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பதி உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சுகாதாரத் துறையினர் அவர்கள் வீட்டுக்குச் சென்று விசாரித்தபோது, கொரோனா கண்டறியப்பட்ட இரு குழந்தைகள் உள்பட 4 பேரும் அமெரிக்காவுக்கு விமானம் ஏறிச் சென்றுவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து மாநில சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment