கண் இமை முடிகளை இயற்கையாகவே படர்ந்து வளரணுமா?… இந்த 6 வீட்டு வைத்தியத்த ட்ரை பண்ணுங்க…

by Column Editor

நீண்ட அழகான கண் இமை முடிகளை பெற்றிருப்பது யாருக்குத் தான் பிடிக்காது. ஏனெனில் நீளமான கண் இமை முடிகள் இருப்பது உங்க கண்களை மேலும் அழகாக்கும். நிறைய பேர் தங்கள் கண் இமை முடிகளை மேலும் அழகூட்ட மஸ்காரா போன்ற செயற்கை இராசயன விஷயங்களையும், செயற்கை முடிகளையும் பயன்படுத்துகின்றனர். இப்படி தினசரி உங்க கண் இமைகளை அழகாக்க நீங்கள் அதிக நேரம் போராட வேண்டியிருக்கும். இப்படி அதிக நேர மேக்கப்பை போடுவதற்கு பதிலாக இயற்கையாகவே உங்க கண் இமை முடிகளை அழகூட்டுவது நல்லது. இது போல உங்க கண் இமைகளை மேலும் அழகூட்ட எந்த மாதிரியான இயற்கையான விஷயங்களை பின்பற்ற வேண்டும் என பார்ப்போம்.

உங்க கண் இமை முடிகளின் வளர்ச்சிக்கு ஆமணக்கு எண்ணெய் பெருமளவில் பயன்படுகிறது.

ஆமணக்கு எண்ணெய்க்கு இயற்கையாகவே முடிகளின் வளர்ச்சியை தூண்டக்கூடிய சக்தி உள்ளது. இது உங்க கண் இமைகளில் முடிகளின் வளர்ச்சியை தூண்டும். ஆமணக்கு எண்ணெய்யில் ரிகினோலிக் என்ற அமிலம் உள்ளது. இது கண் இமை முடிகள் உதிர்ந்து போகாமல் தடுக்க உதவுகிறது. இது கண்கள் வறண்டு போவதை தடுக்கிறது. கண்களுக்கு போதிய ஈரப்பதத்தை கொடுக்கிறது. இருப்பினும் இந்த எண்ணெய்யை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.

பயன்படுத்தும் முறை :

1 டேபிள் ஸ்பூன் குளிர்ந்த ஆமணக்கு எண்ணெய்யை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு காட்டன் பஞ்சில் சிறுதளவு தண்ணீரை எடுத்து கண்களை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். கண்கள் உலர்ந்த பிறகு இரவில் விளக்கெண்ணெய்யை அப்ளே செய்யுங்கள். காலையில் எழுந்ததும் கண்களை நீர் கொண்டு கழுவுங்கள். கண் இமைகளில் மட்டுமே எண்ணெய்யை அப்ளை செய்யுங்கள். கண்களுக்கு உள்ளே எண்ணெய் போவதை தவிருங்கள்.

விட்டமின் ஈ :

விட்டமின் ஈ ஒரு கண்டிஷனராக செயல்படுகிறது. இது உங்க கண் இமைகள் அடர்த்தியாக வளரவும் நீளமாக வளரவும் உதவி செய்கிறது. இது உங்க கண் இமைகளுக்கு மாய்ஸ்சரைசர் தன்மையை கொடுக்கும். இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து கண் இமை முடிகள் உதிர்வதை தடுக்கிறது.

பயன்படுத்தும் முறை :

விட்டமின் ஈ மாத்திரைகளில் உள்ள எண்ணெய்யை கண் இமை முடிகளில் அப்ளே செய்யுங்கள். இதை பயன்படுத்துவதற்கு முன்பு உங்க மருத்துவரிடம் பேசி ஆலோசனை செய்து கொள்ளுங்கள்.

​ஷியா வெண்ணெய் :

விட்டமின் சி நிறைந்த ஷியா வெண்ணெய்யில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைய காணப்படுகிறது. இவை இயற்கையாகவே முடி வளர்ச்சியை சேதப்படுத்தும் காரணிகளில் இருந்து நம்மை காக்கிறது . இது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து ப்ரீ ரேடிக்கல்களை தடுக்கிறது. இது கண் இமைகளின் முடிகளின் வளர்ச்சியை அதிகரிக்கவும் கண் இமை முடிகள் அடர்த்தியாக வளரவும் உதவுகிறது.

பயன்படுத்தும் முறை :

சிறிதளவு ஷியா வெண்ணெய்யை விரல்களில் எடுத்து தேய்க்கவும். அது உருகிய பிறகு உங்க மேல் மற்றும் கீழ் இமைகளில் இரவில் அப்ளே செய்யுங்கள். அப்ளே செய்யும் போது கவனமாக இருக்கவும். இது உங்க கண் இமைகளில் உள்ள முடிகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

​தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெய்யில் லாரிக் அமிலம் உள்ளது. இது ஒரு வகை கொழுப்பு அமிலமாகும். இது கண் இமைகளில் உள்ள மயிர்க்கால்களால் உறிஞ்ப்படுகிறது. இவை கண் இமை முடிகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

பயன்படுத்தும் முறை :

ஒரு டேபிள் ஸ்பூன் குளிர் அழுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய்யை எடுத்துக் கொள்ளுங்கள். உங்க கண் இமைகளை நன்றாக மைல்டு சோப்பு கொண்டு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு நீரைக் கொண்டு கழுவி உலர வையுங்கள். பிறகு ஒரு காட்டன் பஞ்சை எடுத்து அதில் தேங்காய் எண்ணெய்யை தொட்டு கண் இமைகளின் மேல் மற்றும் கீழ் முடிகளில் அப்ளே செய்யுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு காலையில் எழுந்ததும் கழுவி விடுங்கள்.

​க்ரீன் டீ :

க்ரீன் டீயில் ஏராளமான ப்ளவனாய்டுகள் உள்ளன. அவை கண் இமை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

பயன்படுத்தும் முறை :

க்ரீன் டீயை உங்க கண் இமைகளின் மேல் மற்றும் கீழ் பகுதியில் அப்ளே செய்யுங்கள். இது உங்களுக்கு குளிர்ந்த தன்மையை அளிக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை க்ரீன் டீ குடித்து வருவது உங்களுக்கு நிறைய நன்மைகளை தரும்.

Related Posts

Leave a Comment