சரும வறட்சியை தடுக்கும் சில பொருட்களும் மற்றும் குறிப்புக்களும் !!

by Column Editor

சருமத்திற்கு அடர்த்தியான குளியல் சோப் பயன்படுத்தாமல், மென்மையான சோப் பயன்படுத்திக் குளிப்பது நல்லது.

குளித்தவுடன் சருமத்தை அழுத்தித் துடைக்காமல், பருத்தியால் தயாரிக்கப்பட்ட துண்டைக்கொண்டு மென்மையாக ஒற்றி எடுக்க வேண்டும்.

குளித்து முடித்தவுடன் சருமத்தில் மாஸ்சுரைசர் பூசுவதன் மூலம் சரும வறட்சியைத் தடுக்கலாம்.

மாஸ்சுரைசரை ‘லோஷன்’ வடிவத்தில் இல்லாமல், ‘கிரீம்’ மற்றும் ‘ஆயின்மென்ட்’ வடிவத்தில் வாங்குவது நல்லது. மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கும்.

உதடுகளுக்கு லிப்ஸ்டிக் உபயோகிப்பதை விட, லிப் பாம் பயன்படுத்துவதே சிறந்தது. உறுத்தல் ஏற்படுத்தாத மென்மையான லிப் பாம் உபயோகிக்கலாம்.

வழக்கமான சரும பராமரிப்பு பொருட்களை தவிர்த்து, சரும வறட்சியைத் தடுக்கும் வகையிலான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தாத உடைகளை அணியலாம். மேலும் துணிகளை துவைப்பதற்கு அடர்த்தியான வேதிப்பொருட்கள் கலக்காத சோப்புகளை உபயோகிக்கலாம்.

Related Posts

Leave a Comment