பிரித்தானியாவில் ஓமிக்ரோன் கொவிட் மாறுபாட்டின் மூன்றாவது தொற்று கண்டுபிடிப்பு!

by Column Editor

பிரித்தானியாவில் மிக வேகமாக பரவும் ஆற்றல் கொண்ட ஓமிக்ரோன் கொவிட் மாறுபாட்டின் மூன்றாவது தொற்று, கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் தற்போது பிரித்தானியாவில் இல்லை எனவும், அவர் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதிக்கு வந்துசென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொற்று தென்னாபிரிக்காவிற்கு பயணம் செய்வதோடு தொடர்புடையது என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த நபர் பார்வையிட்ட பகுதிகளில், பிரித்தானியாவின் சுகாதார பாதுகாப்பு முகவரகம் சோதனைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமையன்று எசெக்ஸ் மற்றும் நாட்டிங்ஹாம்ஷயரில் இரண்டு உறுதிப்படுத்தப்பட்ட தொற்று பதிவுசெய்யப்பட்ட பின்னர் இது வருகின்றது. இதன்மூலம் பிரித்தானியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

ஒமிக்ரோன் திரிபு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் கடைகளிலும் பொதுப் போக்குவரத்திலும் கட்டாய முகக்கவசங்கள் என்ற கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது.

மேலும், கல்வித் துறை இப்போது 7ஆம் ஆண்டு மற்றும் அதற்கு மேல் உள்ள மாணவர்களும், பாடசாலை ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களும் வகுப்புவாத பகுதிகளில் முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்தி வருகிறது.

இடைநிலைப் பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உட்பட பிரித்தானியாவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும், குழந்தை பராமரிப்பு அமைப்புகளில் உள்ள ஊழியர்களுக்கும் இந்த நடவடிக்கை பொருந்தும்.

Related Posts

Leave a Comment