பிரித்தானியாவில் குளிர்கால வானிலை எச்சரிக்கை இன்றும் நீடிப்பு ..

by Lifestyle Editor

பிரித்தானியா முழுவதும் வீதி, ரயில் மற்றும் விமானப் பயணத் தடையை ஏற்படுத்திய குளிர்கால வானிலை இன்றும் (செவ்வாய்கிழமையும்) தொடரும் என முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்காலிக வானிலை அலுவலக புள்ளிவிபரங்கள், டிசம்பர் 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரித்தானியாவில் திங்கள்கிழமை மிகவும் குளிரான நாள் என்று காட்டுகின்றன,

அபெர்டீன்ஷையரின் பிரேமரில் -9.3 செல்சியஸ் (15F) காணப்பட்டது.

வடக்கு ஸ்கொட்லாந்து, ஓர்க்னி, ஷெட்லேண்ட் மற்றும் வடகிழக்கு இங்கிலாந்தில் பனி மற்றும் பனிக்கட்டிக்கான மஞ்சள் எச்சரிக்கைகள் உள்ளன. தென்கிழக்கு இங்கிலாந்தில் பனிப்பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கையும் உள்ளது.

வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் மூன்று சிறுவர்கள் இறந்ததையடுத்து, குளிர்ச்சியான பனிப்பொழிவு தொடர்வதால், உறைந்த ஏரிகளுக்கு அருகில் விளையாடுவதால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் அறிவுறுத்துமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை கிங்ஷர்ஸ்டில் உள்ள பாப்ஸ் மில் பூங்காவில் உள்ள ஏரியில் விழுந்து 8, 10 மற்றும் 11 வயதுடைய சிறுவர்கள் இறந்தனர். ஆறு வயதுடைய நான்காவது சிறுவன் தண்ணீரில் இருந்து இழுக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார்.

பிரிட்டனின் சில பகுதிகளில் செவ்வாய்கிழமை மீண்டும் கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என்றும், உயரமான நிலங்களில் 15-20cms (6-8ins) வரை குவியும் என்றும் வானிலை அலுவலக செய்தித் தொடர்பாளர் ஒலி கிளேடன் தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment