இந்திய – சீன படைகள் மோதல்: எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு ..

by Lifestyle Editor

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நேற்று இந்திய சீன படைகள் மோதி கொண்டதாக வெளிவந்த தகவல் இரு நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது.

அருணாச்சல பிரதேசத்தில் இந்திய சீன படைகள் மோதல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது .

சீன ராணுவத்தின் அத்துமீறல் தொடர்பாக பிற்பகலில் ராஜ்நாத்சிங் விளக்கம் அளிப்பார் என மத்திய அரசு கூறியது. ஆனால் மத்திய அரசின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் மக்களவை ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Posts

Leave a Comment