பிரித்தானியாவில் காலிஸ்தான் ஆதரவாளருக்கு 28 மாதம் சிறை

by Lifestyle Editor

பிரித்தானியாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு 28 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் வசித்து வரும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், இந்திய தூதரகங்களுக்கு முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி, பிரித்தானிய தலைநகர் லண்டன் மேற்கு பகுதியில் நடைபெற்ற இந்திய சுதந்திரதின விழாவில் கலந்துக் கொண்ட இரு இந்திய வம்சாவளியினரை காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில், ஆஷிஷ் சர்மா மற்றும் நானக் சிங் ஆகிய 2 இந்திய வம்சாவளியினரும் பலத்த காயமடைந்தனர்.

இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது.

இதனையடுத்து, தாக்குதலை மேற்கொண்ட காலிஸ்தான் ஆதரவாளரான குர்பி ரித் சிங்கை, பிரித்தானிய பொலிஸார் கைது செய்து, அவரை ஜல்வர்த் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த நபருக்கு 28 மாத ஜெயில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment