217
ஜேர்மனியிலும் முதல் முறையாக ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸானது பல்வேறு உருமாற்றங்களை அடைந்துள்ளது. டெல்டா, டெல்டா பிளஸ் என பல்வேறு வடிவங்களுடன் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையே, தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்துள்ள புதிய வைரஸிற்கு ஒமிக்ரோன் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்திலும் ஒமிக்ரோன் என்ற உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பி வந்த இருவரே இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேபோன்று ஜேர்மனியிலும் முதல் முறையாக 2 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.