196
தொடர் மழை காரணமாக சென்னையில் மீண்டும் தக்காளி விலை அதிகரித்திருக்கிறது. இதனால், பொது மக்கள் கவலை அடைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால், சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் தக்காளி விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்தது. இதனால், 60 ரூபாய்க்கு 1 கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று 15 ரூபாய் உயர்ந்து 75 ரூபாய்க்கு 1 கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 600 டன் தக்காளி வந்தது.
இந்நிலையில், இன்று 653 டன் தக்காளி வந்திருக்கிறது. தக்காளியின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலை தற்போது கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.