355
பிக்பாஸ் 5வது சீசன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க நடந்து வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு பதிலாக இந்த வாரம் நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், மக்களும் வரவேற்றார்கள்.இன்று காலை பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோ வந்துள்ளது. அதில் வீட்டு தலைவருக்கான போட்டி நடக்க அண்ணாச்சி தேர்வாகிறார்.
ஆனால் அவரை மாற்றலாம் என்ற சலுகையை பிக்பாஸ் கொடுக்க அந்த பதவியை தான் வகிப்பதாக நிரூப் கூறுகிறார். அண்ணாச்சி தலைவராக இருக்க ஆசைப்பட்டதும் தெரிகிறது.