தக்க பாடம் புகட்டிய ரம்யா கிருஷ்ணன்! திக்கி திணறிய போட்டியாளர்களின் பரிதாப நிலை…. இது தேவையா?

by Column Editor

பிக் பாஸில் ரம்யா கிருஷ்ணன் வார்டன் மற்றும் ஆசிரியர்கள் நால்வரும் திருக்குறளை ஒப்புவிக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுத்து பாடம் புகட்டினார்.

இதை ஐந்து நிமிடத்தில் எனக்கு சொல்ல வேண்டும் இல்லன்னா தண்டனை தான் என்கிறார்.

இதனால் அவர்கள் நான்கு பேரும் திருக்குறளை மனப்பாடம் செய்கிறார்கள்.

ரம்யா கிருஷ்ணனிடம் ராஜூ எனக்கு திருக்குறள் தெரியாது மேடம் என்று சொல்ல அடுத்ததாக வரும் அபிஷேக் எனக்கு தண்டனை கொடுங்க என்று சரண்டர் ஆகிறார்.

இறுதியாக சிபி திருக்குறளை சொல்ல முடியாமல் தலையை சொரிகிறார்.

உடனே , மற்ற போட்டியாளர்கள், இவர்கள் நால்வருக்கும், இரவு முழுவதும் வெளியில் படுக்கும் தண்டனை கொடுங்க என்கின்றனர்.

பிறகு இந்த வாரத்தில் யார் வெளியேற சேவ் செய்யப்படுகின்றார்கள் என்பதை அறிவித்தார் ரம்யா கிருஸ்ணன். இறுதியில் நிரூப் மற்றும் ஐக்கி ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற போவதாக அறிவித்தார்.

பின்னர் ஐக்கி வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவித்து மக்களின் தீர்ப்பை வழங்கினார்.

Related Posts

Leave a Comment