அவளுக்கு என்ன தான் பிரச்னை – கொந்தளித்த அக்‌ஷரா

by Column Editor

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் அக்‌ஷராவுக்கும் பிரியங்காவுக்குமான சண்டை இன்றும் தொடர்வதாக தெரிகிறது.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தவிர, அமீர் மற்றும் சஞ்சீவ் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், “வாட் இஸ் ஹெர் பிராப்ளம்” என வருணிடம் கத்துகிறார் அக்‌ஷரா. மறுபுறம் ‘தமிழ்ல பேசுங்கன்னு சொன்னேன்’ என மற்ற ஹவுஸ் மேட்ஸ்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும் பிரியங்கா, ‘ஒரு வாட்டி 2 வாட்டி அப்படி பேசுனா சும்மா இருப்பேன். எல்லா வாட்டியும் அப்படி பேசினா, நா எல்லாம் என்னோட சுய மரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என்கிறார். அப்போது ’இவங்களுக்கு மட்டும் தான் சுயமரியாதை இருக்கு, மத்தவங்களுக்கு எதுவுமே இல்ல. எல்லாரும் லூசு மாதிரி ரோட்ல சுத்திட்டு இருக்கும் பாரு’ என வருணிடம் தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார் அக்‌ஷரா.

Related Posts

Leave a Comment