இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் இவர்தானா!! வெளியான தகவல்…

by Column Editor

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்கி பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. இந்த சீசனில் பல்வேறு துறையை சேர்ந்த 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இவர்களில் திருநங்கையான நமீதா சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு சில நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நாடியா சாங், அபிஷேக், சின்ன பொண்ணு, சுருதி,மதுமிதா,இசைவாணி என அடுத்தடுத்ததாக போட்டியாளர்கள் குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேறினர்.

இந்நிலையில் வெளிநாட்டில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நாடு திரும்பிய கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் இந்த வாரம் யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்த நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற சர்ச்சை நிலவி வருகிறது.

இந்நிலையில் புதிததாக பிக்பாஸ் சீசன்5 குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த வாரம் ஐக்கி பெர்ரி வீட்டை விட்டு வெளியேற இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது.

Related Posts

Leave a Comment