பிக் பாஸ் போட்டியாளர்கள் கமலுக்கு கொடுத்த அசத்தலான தீபாவளி பரிசு

by Lifestyle Editor

இன்று தீபாவளி என்பதால் பிக் பாஸ் போட்டியாளர்கள் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பரிசாக அவரது பட பாடலுக்கு ஆடி அசத்தியுள்ளனர்.

பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப் என 7 பேர் வெளியேறியுள்ளனர்.

மாயா கடந்த வாரம் சர்வாதிகார தலைவராக இருந்து பிடிக்காத போட்டியாளர்களை பழி தீர்த்து வந்தார். இதனை நேற்றைய தினம் கமல்ஹாசன் குறும்படம் போட்டு காட்டியுள்ளார்.

இன்றைய தினம் தீபாவளி என்பதால் இதுவரை சண்டை போட்டு வந்த போட்டியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கமல் பட பாடல் ஒன்றிற்கு நடனமாடி அசத்தியுள்ளனர். குறித்த நடனம் இன்றைய நிகழ்ச்சியின் ஹைலைட்டாக இருந்து ரசிகர்களைக் கவர்ந்தது.

Related Posts

Leave a Comment