அர்ஜுன், பிரபுவின் மாஸ் காட்சிகளை வெளியிட்டுள்ள மோகன் லால்; இன்னும் 5 நாட்களில் மரைக்காயர்!!

by Column Editor

இன்னும் 5 நாட்கள் என பதிவிட்டுள்ள மோகன்லால்; மரைக்காயர் படத்தில் அர்ஜுன், பிரபு நடித்துள்ள பட காட்சிகளை வெளியிட்டுள்ளார்.

மிக பிரம்மாண்டமாக 100 கோடி செலவில் உருவாகியுள்ள மோகன்லாலின் “மரைக்காயர்”’ படத்தை முன்னணி இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜுன், மஞ்சு வாரியர், அசோக் செல்வன், சுஹாசினி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் இந்திய கடற்படை எல்லையில் முதன்முறையாக கடற்படை பாதுகாப்பை உருவாக்கியவராக அறியப்படும் குன்ஹாலி மரைக்காயரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

திரு – ஒளிப்பதிவாளராகவும், சாபுசிரில் – கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ள இந்த படம் முழுக்க முழுக்க ஐதராபாத்தில் உள்ள ராமோஜீ பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில் தான் படமாக்கப்பட்டது. இப்படத்தின் ட்ரைலர் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. மேலும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த கிராஃபிக்ஸ் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை மரக்காயர் குவித்திருந்தது. தமிழில், இந்தப் படத்துக்கு ’மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.

இரண்டு வருடங்களுக்கு மேலாக ரிலீசுக்கு காத்திருக்கும் இந்த படத்தை ஓடிடியில் வெளியிடவுள்ளதாக இதன் தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் தெரிவித்திருந்தார். அதோடு பிரபல ஓடிடி தளமான அமேசான் ப்ரைம் 100 கோடி ரூபாயும் மரக்காயர் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியதாக தகவல் வெளியாகியது.

இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து திரையரங்கில் மரைக்காயர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

வரும் டிசம்பர் 2-ம் தேதி வெளியாகிவுள்ள இந்த படம் குறித்து இன்னும் 5 நாட்கள் என பதிவிட்டுள்ள மோகன்லால்; மரைக்காயர் படத்தில் அர்ஜுன், பிரபு நடித்துள்ள பட காட்சிகளை வெளியிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment