ஸ்கொட்லாந்தில் 40- 49 வயதுடையவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி!

by Column Editor

ஸ்கொட்லாந்தில் உள்ள 40 முதல் 49 வயதுடையவர்கள் இன்று (சனிக்கிழமை) முதல் கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் அளவை பெற பதிவு செய்ய முடியும்.

தடுப்பூசி திட்டம், 16 மற்றும் 17 வயதுடையவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். அவர்கள் அடுத்த செவ்வாய்க்கிழமை முதல் இரண்டாவது அளவுகளுக்கான இடங்களை முன்பதிவு செய்யலாம்.

குறைந்தது 24 வாரங்களாவது இரண்டாவது மற்றும் பூஸ்டர் அளவிpற்கு இடையில் அல்லது முதல் மற்றும் இரண்டாவது அளவுகளுக்கு இடையில் 12 வாரங்கள் கழிந்திருக்க வேண்டும்.

தேசிய சுகாதார சேவையின் இன்ஃபார்ம் போர்ட்டலைப் பயன்படுத்தி அல்லது தேசிய தொலைபேசி உதவி எண்ணைப் பயன்படுத்தி முன்பதிவுகளை மேற்கொள்ளலாம்.

தென்னாபிரிக்கா, ஹொங்கொங், போட்ஸ்வானா, நமீபியா, இஸ்ரேல் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட பி.1.1.529 ‘ஒமிக்ரான்’ எனப்படும் வைரஸின் புதிய மாறுபாடு குறித்த கவலையின் மத்தியில் ஸ்கொட்லாந்தின் தடுப்பூசி திட்டத்திற்கான சமீபத்திய நீடிப்பு வந்துள்ளது.

Related Posts

Leave a Comment