பிரித்தானியப் பொதுத்தேர்தல் : நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்தத் தீர்மானம்!

by Editor News

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளை நாளை தொடக்கம் இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு வாக்கிற்காகவும் தாம் போராடவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் அவரது உரையில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் உரியகாலத்திற்கு முன்பதாகவே கலைக்கப்பட்டு நடத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இந்நிலையில் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளை நாளை தொடக்கம் இடைநிறுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உரிய காலத்திற்கு முன்னதாகவே தேர்தலை நடத்தும் பிரித்தானிய பிரதமரின் தீர்மானத்திற்கு கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனினும் எதிர்வரும் 30ஆம் திகதி நாடாளுமன்றம் உத்தியோகபூர்வமாக கலைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 5 வாரங்களின் பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment