பிக்பாஸ்..இன்றைக்கு ப்ரோமோ இல்லையா…. கேள்வி கேட்கும் ரசிகர்கள்

by Column Editor

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ம் தேதி துவங்கி ஒளிபரப்பாகி வருகிறது. 50 நாட்களை கடந்து விட்ட இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக கமல் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவருக்கு பதில் யார் தொகுத்து வழங்க போகிறார் என உறுதியாக தெரியவில்லை.

இருந்தாலும் கமல் திரும்ப வரும் வரை அடுத்த சில வாரங்களுக்கு ரம்யா கிருஷ்ணா தான் தொகுத்து வழங்க உள்ளதாக பெரும்பாலான தகவல்கள் உறுதி செய்துள்ளன. கமல் வரும் வார இறுதி எபிசோட்களின் முதல் நாள் என்பதால் இன்றைய நிகழ்ச்சி மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.

வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சிகளாக தினமும் 3 ப்ரோமோக்கள் வெளியிடப்படும். காலை 9, 12, 2 எ என மூன்று ப்ரோமோக்களை வெளியிடுவார்கள். இதை வைத்தே இன்று இது தான் நடக்க போகிறது என்பதை ரசிகர்கள் ஓரவிற்கு கணித்து வந்தனர்.

ப்ரோமோவில் இருக்காதே :

எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற பிக்பாஸ் டயலாக்கை போல் ப்ரோமோவில் காட்டப்படும் பல விஷயங்கள் தினசரி எபிசோடிலோ அல்லது அன்சீனிலோ இடம்பெறாது. இதை கேள்வி கேட்டும், கலாய்த்தும் வருகின்றனர் நெட்டிசன்கள். இருந்தாலும் தினசரி பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக வெளியிடப்படும் ப்ரோமோக்களுக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

ப்ரோமோ காணோமே :

ஆனால் இன்றைய வார இறுதி நாள் எபிசோடிற்கான ஒரு ப்ரோமோ கூட பகல் ஒரு மணி வரை வெளியிடப்படவில்லை. இதை குறிப்பிட்டு சோஷியல் மீடியாவில் பலர், ப்ரோமோ எங்கே என கேள்வி கேட்டு வருகின்றனர். ப்ரோமோவை மறந்துட்டீங்களா பிக்பாஸ் என்றும் கேட்டு வருகின்றனர்.

பிக்பாசை கேள்வி கேட்டும் ரசிகர்கள் :

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடிற்கான ஷுட்டிங் வியாழக்கிழமையே முடிக்கப்பட்டு விடும். அப்படி இருக்கையில் இதுவரை ப்ரோமோ வெளியிடாதது ஏன் என புரியாமல் ரசிகர்கள் குழம்பி உள்ளனர். ஒருவேளை கமலுக்கு பதில் பிக்பாஸை தொகுத்து வழங்க போவது யார் என்ற சஸ்பென்சை கடைசி நிமிட வரை வைத்திருப்பதற்காக இன்று ப்ரோமோ வெளியிடவில்லையா என பலர் கேட்டுள்ளனர்.

சஸ்பென்ஸ் வைக்க தானா :

வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்று கிழமை ப்ரோமோக்களில் கமல் தான் வருவார். அதனால் கமலுக்கு பதில் தொகுத்து வழங்க போகிறவரை சஸ்பென்சாக அறிமுகம் செய்து வைப்பதற்காக ப்ரோமோ வெளியிடாமல் இருக்கலாம் என கூறி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment