கட்ச் வளைகுடாவில் மோதிக்கொண்ட சரக்கு கப்பல்கள்… கடலில் எண்ணெய் படலம்!

by Column Editor

குஜராத் மாநிலம் துவாரகா மாவட்டத்தின் ஓகாவிலிருந்து 10 மைல் தொலைவிலுள்ள கட்ச் வளைகுடாவில் நேற்று இரவு இரண்டு வெளிநாட்டு சரக்கு கப்பல்கள் எதிர்பாராவிதமாக மோதிக்கொண்டன. அந்தக் கப்பல்களின் பெயர் எம்விஎஸ் ஏவியேட்டர் மற்றும் அட்லாண்டிக் கிரேஸ் (MVs Aviator & Atlantic Grace). இந்த விபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் இந்திய கடலோர காவல்படை கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் அப்பகுதியிலுள்ள நிலவரத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்டுள்ளன.

கப்பல்களைச் சுற்றி எண்ணெய் படலம் சூழந்துள்ளதாக கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் கடல் மாசை தடுப்பதற்கான கப்பலும் அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கட்ச் வளைகுடா இந்தியாவின் எண்ணெய் வர்த்தகத்திற்கான முதன்மையான வழித்தடங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் இந்தப் பகுதியில் அடிக்கடி எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment