’முதல் வாரத்தில் எவிக்ஷன் இருக்கு’… போட்டியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கமல் !

by Column Editor

இந்த வாரம் எவிக்ஷன் இருப்பதாக கமல் அறிவித்ததால் போட்டியாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இன்றைய தினத்தின் இரண்டாவது ப்ரோமோவில் காபி பொடி பிரச்சனையில் வனிதாவை கண்டித்த கமலின் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து மூன்று ப்ரோமோவில் இந்த வார எவிக்ஷன் குறித்த கமல் பேசும் காட்சிகள் உள்ளது. அதனால் இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார்கள் என்ற பரபரப்பு இருக்கிறது.

இந்நிலையில் அந்த ப்ரோமோவில் சுரேஷ் மற்றும் வனிதாவை தனிதனியாக அமர சொல்கிறார் கமல். மேலும் பேசும் அவர், சில விஷயங்கள் வனிதாவிற்கு முன்னரே தெரிந்துவிடுகிறது. முதல் வாரம் எவிக்ஷன் இருக்காது என்று சுரேஷ் சக்ரவர்த்தியிடம் சொன்னீர்கள். அது எப்படி சொன்னீர்கள் என்று வனிதாவிடம் கமல் கேட்கிறார். இதனால் எவிக்ஷன் இல்லை என்று போட்டியாளர்கள் கைதட்டி மகிழ்ச்சியடைகின்றனர்.

இந்த மகிழ்ச்சி சில நொடிகள் கூட நீடிக்காத நிலையில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று இந்த வார எவிக்ஷன் உள்ள நபரின் கவரை எடுக்கிறார். இதனால் போட்டியாளர்கள் அதிர்ச்சியடைகின்றனர். யாரென்று காட்ட வேண்டியது தானே.. இதில் என்ன விளையாட்டு வேண்டி இருக்கு என்று நீங்கள் சொல்வது என கேட்கிறது என்ற சஸ்பென்ஸுடன் முடியும் ப்ரோமோ வெளியாகிறது. அதனால் இந்த வார எவிக்ஷன் யார் என்பது இரவு நிகழ்ச்சியில் தெரிந்துவிடும்.

Related Posts

Leave a Comment