தாமரையின் உண்மையான முகம் இதுதான்.. ரகசியத்தை உடைத்த அமீர்

by Column Editor

தாமரையின் உண்மையான முகம் என்ன என்பதை பற்றி அமீர் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி 54 நாட்களாக விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் தொடர்ந்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். நிகழ்ச்சியை சுவாரஸ்சியமாக்க புதிய புதிய டாஸ்க்குகளில் போட்டியாளகள் விளையாடி வருகின்றனர். அதோடு ஒவ்வொரு வாரமும் பார்வையாளர்களின் ஆதரவை பெறாத போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியை மேலும் மெருக்கூட்ட வைல்டு கார்டு முறையில் போட்டியாளர்கள் நுழைந்து வருகின்றனர். ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் எலிமினேட் செய்யப்பட்ட அபிஷேக் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார். அதன்பிறகு நடன இயக்குனர் அமீர் நுழைந்தார். நேற்று பிரபல நடிகரும், விஜய்யின் நண்பருமான சஞ்சீவ் அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்கு வந்து போட்டியாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

இந்நிலையில் இன்றைய தினத்தின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், தாமரை எப்படிப்பட்டவர் என்று சக போட்டியாளர்களிடம் அமீர் கூறுகிறார். தாமரை கிட்ட எல்லாருமே ஏமாறுறீங்க போல் தெரிகிறது. அவர்தான் பிக்பாஸ் வீட்டில் ரொம்ப புத்திசாலி தனமாக விளையாடி வராங்க. என்கிறார். அப்போது குறுக்கிடும் நிரூப், தாமரை அறியாமையால் அப்படி செய்கிறார் என்று சொல்ல, அதெல்லாம் கிடையவே கிடையாது. அவங்களுக்கு வேண்டியவர்களிடம் மட்டும் சரியாக விளையாடுகிறார். மேலும் தன் மேல் ஒரு பரிதாபம் உண்டாகும் வகையில் பிக்பாஸ் வீட்டில் செயல்படுகிறார். ஆனால் பார்வையார்கள் அவர் மீது நெகட்டிவ் இமேஜ் தான் வைத்திருக்கிறார்கள் என்று கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment