சிபி சமாதானம் சொல்லியும் கண்டுக்கொள்ளாத அக்ஷரா.. இந்த வாரம் கட்டம் கட்டப்படுவாரா ?

by Column Editor

சிபி சமாதானம் சொல்லியும் அக்ஷரா கோபமாக இருக்கும் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இன்று வெளியான இரண்டு ப்ரோமோக்களிலும் அக்ஷரா மற்றும் சிபி மோதல் குறித்து காட்சிகள் காட்டப்பட்டது. நேற்று கொடுக்கப்பட்ட புதிய டாஸ்க்கில் விளையாடிய போது இருவருக்கிடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் சிபி மீது கோபப்பட்ட அக்ஷரா வாக்குவாதம் செய்தார். இந்த வாக்குவாதம் முற்றி பொருட்களையெல்லாம் போட்டு உடைத்தார். இதனால் கன்பெஷன் ரூமிற்கு வரும்படி காட்சிகள் காட்டப்பட்டது.

இதையடுத்து மூன்றாவது ப்ரோமோவிலும் அந்த காட்சிகள் தொடர்ச்சியாக கார்டன் ஏரியாவில் உள்ள அக்ஷராவிடம் சிபி பேச முயற்சிக்கிறார். அப்போது நீங்கள் பேசுவது, நீங்கள் செய்யும் சில விஷயங்கள் எல்லாம் தேவையில்லாததை போல் இருக்கிறது. இதுக்கு மேல உங்கக்கிட்ட பேச விருப்பம் இல்லை என்று அக்ஷரா, சிபியிடம் மிகவும் கோபமாக கூறுகிறார்.

இதற்கு சமாதானம் சொல்லும் வகையில் பேசும் சிபி, அதனால்தான் எல்லாவற்றையும் தூக்கிப்போட்டு உடைத்துவிட்டு பேயிட்டீங்க. அப்படிதானே என்கிறார் சிபி. மேலும் பேசும் அவர், நீங்க வருவீங்களா இல்லையா என்று சொல்லுங்க. எல்லோரிடமும் நடந்து கொள்வதை போன்றுதான் நடந்து கொள்கிறேன். அப்படிதான் இருக்கும். வருவது என்றால் வாங்க.. இல்லாயென்றால் உங்க இஷ்டம். நான் இப்படி நடந்துக்குவேன் என்று கூறுகிறார். அதற்கு சரி சரி என்று கூறியப்படி கார்டன் ஏரியாவிலேயே கோவமாக அக்ஷரா அமர்ந்துள்ளார். இதனால் அடுத்து என்னவாகும் என்ற பரபரப்பு நிலவுகிறது.

Related Posts

Leave a Comment