‘ரொம்ப கோவம் வருது..இல்லைன்னா அழுகை வருது’ – கண்ணீர் சிந்தும் அக்ஷரா

by Column Editor

எனக்கு அழுகை வருகிறது என்று அக்ஷரா கண்ணீர் சிந்தும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வாரந்தோறும் பிக்பாஸ் வீட்டில் புதிய டாஸ்க் கொடுக்கப்படுவது வழக்கமான ஒன்று. இந்த டாஸ்க்குகளால் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களிடையே பிரச்சினை ஏற்பட்டு அடித்துக் கொண்டதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த வாரம் கொடுக்கப்பட்ட பொம்மை டான்ஸ்க்கால் பிக்பாஸ் வீடே கலவரமாக மாறியது. இந்த டாஸ்க்கால் போட்டியாளர்கள் எல்லை மீறியதாக கமல் குறிப்பிட்டு சிலரை கண்டித்திருந்தார்.

இந்நிலையில் அதே போன்றதொரு புதிய டாஸ்க்கை பிக்பாஸ் அறிவித்துள்ளார். ‌‌‌‌ அதன்படி இந்த டாஸ்க்கு ‘உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்படுவார்கள். அப்படி பிரிக்கப்படும் அணியில் டீம் ஏ அணி போட்டியாளர்கள் கண்ணாடியாக மாறி டீம் பி அணியினரை பிரதிபலிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

அதோடு இந்த டாஸ்க்கில் பங்கேற்கும் ஜோடிகளின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சிபி, அக்ஷாரவின் கண்ணாடியாக மாறவேண்டும். இசைவாணி, இமான் அண்ணாச்சி கண்ணாடியாக மாறவேண்டும். கடைசியாக இந்த டாஸ்க்கில் சிபியுடன் விளையாடும் அக்ஷா, ரொம்ப கோபம் வருகிறது. இல்லையென்றால் அழுகை வருகிறது. நான் செய்வது என்று கண்ணீர் சிந்தும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment