சரும நிறம் சீராக இருக்க இதை செய்யலாம்

by Column Editor

தற்காலிக முகப்பொலிவை மட்டும் தராமல் நிரந்தரத்தீர்வையும் இயற்கையான முறையில் கொடுக்கக்கூடிய சில குறிப்புகளை இங்கே பார்ப்போம்.சருமம் முழுவதும் சீரான நிறத்தை பெறுவதற்காக பலவித அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துகிறோம். இவற்றுள் பெரும்பாலானவை குறுகிய கால வெளிப்புற அழகை மட்டுமே வழங்கும் தன்மை கொண்டவையாகும். தற்காலிக முகப்பொலிவை மட்டும் தராமல் நிரந்தரத்தீர்வையும் இயற்கையான முறையில் கொடுக்கக்கூடிய சில குறிப்புகளை இங்கே பார்ப்போம்.

ஆப்பிள், பீட்ரூட், கேரட் பானம் :

* 1 ஆப்பிள், அரை பீட்ரூட், 1 கேரட், சிறிய இஞ்சித்துண்டு போன்றவைற்றை சேர்த்து அரைத்து அதில் 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து தினமும்காலையில் பருகலாம். இந்த பானம் உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து மேனியை பொலிவாக்கும் ஆற்றல் கொண்டது.

* 3 தேக்கரண்டி கோதுமை மாவு, 2 தேக்கரண்டி தயிர், 1 தேக்கரண்டி கஸ்துரி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை நன்றாக கலந்து உடல் முழுவதும் பூசி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சருமம் பளபளப்பாகும்.

* 4 தேக்கரண்டி சர்க்கரை, 2 தேக்கரண்டி காபி தூள், 2 தேக்கரண்டி தேன், 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து உடல் முழுவதும் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சீரான நிறத்தை பெற முடியும். சருமமும் மென்மையாகும்.

* 3 தேக்கரண்டி அரிசி மாவு, 5 தேக்கரண்டி கேரட்சாறு, 6 தேக்கரண்டி பால் சேர்த்து கலந்து குளிப்பதற்கு முன்பு உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் சருமம் பொலிவு பெறும்.

* வெட்டி வேர் 50 கிராம், உலர்ந்த ஆவாரம் பூ 25 கிராம், உலர்ந்த மகிழம் பூ 50 கிராம், கஸ்துரி மஞ்சள் 50 கிராம், பூலான் கிழங்கு 50 கிராம், கோரைக்கிழங்கு 50 கிராம், வேப்பிலை பொடி 20 கிராம், இவற்றை பொடியாக அரைத்து கொள்ளவும். 100 கிராம் பச்சை பயிறு, உலர்ந்த ரோஜா இதழ்கள் 20, உலர்ந்த ஆரஞ்சு தோல் 30 கிராம் ஆகிய மூன்றையும் சேர்த்து பொடியாக்கி கொள்ளவும். தினமும் குளிக்கும் போது இரண்டு கலவையையும் முறையே 2 தேக்கரண்டி மற்றும் 1 தேக்கரண்டி அளவுக்கு எடுத்து பன்னீருடன் கலந்து உடல் முழுவதும் பூசி 10 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு குளிக்க வேண்டும். இதன் மூலம் உடல் முழுவதும் சருமம் சீரான நிறம் பெறும்.

Related Posts

Leave a Comment