ராஜா ராணி சீரியலில் இருந்து விலகுகிறாரா ஆல்யா மானசா!

by Column Editor

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் ராஜா ராணி 2 இதில் நடித்து வரும் நடிகை ஆல்யா மானசாவிற்கு ரசிகர்கள் கூட்டம் மிகவும் அதிகம்.

மேலும் ராஜா ராணி முதல் பாகத்திலும் கதாநாயகியாக நடித்திருந்த ஆல்யா மானசா, அந்த தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐலா என்ற ஒரு பெண் குழந்தையும் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் இந்த ஜோடி ‘சஞ்ஜீவ் ஆல்யா’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் சஞ்சீவ், தனது மனைவி மீண்டும் கர்ப்பமாக அறிவித்திருந்தார். ஆனால் ஆல்யா இதனை உறுதிப்படுத்தாத நிலையில் சமீபத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு தலையாட்டி, தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்திருந்தார் ஆல்யா.

இதனிடையே மீண்டும் கர்ப்பமாக இருக்கும் ஆல்யா ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலக போவதாக ஒரு செய்தி பரவி வருகிறது. இது குறித்து ஆல்யா மானசா இன்னும் உறுதிசெய்யவில்லை.

Related Posts

Leave a Comment