“தாமரையிடம் நீ யாருன்னு காட்டு” – பிரியங்காவை உசுப்பிவிடும் அபிஷேக் !

by Column Editor

பிக்பாஸ் வீட்டில் நீ யாருன்னு காட்டு என்று பிரியங்காவை உசுப்பிவிடும் அபிஷேக்கை கழுவி ஊற்றி வருகின்றனர்.

இன்றைய தினத்தின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் தாமரை என்ன சொல்றாங்க, நீங்க மத்தவங்க கிட்ட காட்டுற அன்புல, சில பேர்தான் உண்மையாக இருக்காங்க, உன்னை விலைக்கு வாங்கிடலான்னு சொல்றாங்க, ஜால்ரானு சொல்றாங்க இந்த வாரத்திலாவது உன் வாய்ஸ்ச காட்டு. இதையெல்லாம் கேட்கறதுக்கே கேவலமாக இருக்கு. என்னால பார்க்கவே முடியல என்று‌ பெரிய அளவுக்கு பில்டப் செய்து பிரியங்காவை அபிஷேக் உசுப்பி விடுகிறார்.

இதையடுத்து அபிரிஷேக்குடன் சாப்பிடும்போது பேசும் பிரியங்கா, நான் தாமரைக்கோ, இல்லை மற்றவர்களுக்கோ நிரூப்பிக்க வரல என்று முகத்தில் அடித்ததுபோல அபிஷேக்கிடம் சொல்கிறார். இதற்கு சாமாளிக்கும் விதமாக பேசும் அபிஷேக் , எனக்கு என்ன நீங்க என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க என்று சொல்கிறார்.கடைசியாக இதையெல்லாம் கேட்டுவிட்டு ரொம்ப சந்தோஷம் என்று சொல்வது போன்று ப்ரோமோ காட்சி வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அபிஷேக்கை கழுவி ஊற்றி வருகின்றனர். அபிஷேக் மீண்டும் தனது பழைய வேலையை ஆரம்பிச்சிட்டாரு. அதனால் இனி பிக்பாஸ் வீடு களைக்கட்டப் போகிறது என்று பல கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment